"அவதார் 2" வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.!

Keerthi
3 years ago
"அவதார் 2" வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.!

அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகம், வருகின்ற 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 16ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவரும், பிரம்மாண்டத்தின் மறுபெயர் ஆக அறியப்படும் இயக்குனருமான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009ஆம் ஆண்டு 'அவதார்' திரைப்படம் வெளியாகி, உலகமெங்கும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

வெள்ளித்திரையில் இவ்வளவு ஒரு பிரம்மாண்டத்தை வெளிக்காட்டி, மனிதர்களை வேறொரு உலகத்துக்கு அழைத்து சென்றிருந்தார் ஜேம்ஸ் கேமரூன். சுமார் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது.

அதற்கு மேல் வசூல் செய்தாலும்m அந்த படத்துக்கு தகுதியானது தான். அவ்வளவு நேர்த்தியான ஒரு கலைப்படைப்பு, மாபெரும் பொக்கிஷம் என்று கூட சொல்லலாம். படத்தின் கதை சுருக்கம் மிக எளியது. அவதார் படத்தின் மையக் கருவை வைத்து, தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் தொடங்கி விஜய் வரை பல பேர் நடித்துவிட்டு ஒரு கதை தான்.

ஒரு இன மக்களை அவர்களின் இருப்பிடத்திலிருந்து துரத்தி விட்டு, அதை ஆக்கிரமிக்கும் ஆக்கிரமிப்பாளர்களை, எதிர்த்து நடைபெறும் சண்டை தான் கதை. இதில் காதல், உறவு உள்ளிட்ட அனைத்தும் அடங்கும். இந்தக் கதையை மிக பிரம்மாண்டமாக, நேர்த்தியாக செதுக்கி வைத்திருந்தார் ஜென்ஸ் கேமரூன்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 16ம் தேதி வெளியாக உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதால், ஜேம்ஸ் கேமரூனின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!